காகபுசுண்டர் உபநிடதம் 21 - 25 of 31 பாடல்கள்
21. பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன்
பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்
வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட
வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்;
சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்;
ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்;
ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே.
விளக்கவுரை :
22. யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்
உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே;
ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்
அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்;
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்;
சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி;
மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே.
விளக்கவுரை :
23. மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத
மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா;
சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
மூலவிந்து களாதீத மொழிய லாமே.
விளக்கவுரை :
24. மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே.
விளக்கவுரை :
25. விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே.
விளக்கவுரை :
காகபுசுண்டர் உபநிடதம் 21 - 25 of 31 பாடல்கள்
காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் உபநிடதம், kakapusundar, kakapusundar upanidatham, siththarkal