பட்டினச் சித்தர் ஞானம் 11 - 15 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 11 - 15 of 101 பாடல்கள்


11. கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாய் - பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன் பது.

விளக்கவுரை :

12. ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே - இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர்..

விளக்கவுரை :

13. மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே - செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல்.

விளக்கவுரை :

14. கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே - எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை
கலக்கமறப் பார்த்தே கரை.

விளக்கவுரை :


15. கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal