காகபுசுண்டர் ஞானம் 26 - 30 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 26 - 30 of 79 பாடல்கள்

     
26. அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
    அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
    பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
    விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
    கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே.

விளக்கவுரை :
    
27. தாமென்ற உலகத்தில் மனித ரோடே
    சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
    ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
    ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
    காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே.

விளக்கவுரை :

28. விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
    வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு
    மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்;
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
    அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
    கபடமற்ற தேகமடா கண்டு பாரே.

விளக்கவுரை :

    
29. கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
    கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால்
    தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்
தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா
    தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு
விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும்
    வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே.

விளக்கவுரை :
    
30. பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர்
    பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா!
ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது
    அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்;
நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்
    நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்
    வேறில்லாக் கனிதனையு முண்க லாமே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal