காகபுசுண்டர் உபநிடதம் 26 - 31 of 31 பாடல்கள்

காகபுசுண்டர் உபநிடதம் 26 - 31 of 31 பாடல்கள்

     
26. பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
    பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
    சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
    திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
    கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.

விளக்கவுரை :
    
27. கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
    கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;   
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
    விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
    உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
    அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;

விளக்கவுரை :

    
28. அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை
    அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
    குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
    நீக்காம லேகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப்
    பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே.

விளக்கவுரை :
    
29. புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
    பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
    சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு;
    விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
    வத்துவதே காரணமா மகிமை யாச்சே.

விளக்கவுரை :

    
30. மகிமையென்று யோகசா தனையி னாலே
    மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே;
அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே;
    அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம்
சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில்
    சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு;
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு;
    பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே.

விளக்கவுரை :

    
31. பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
    பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம்   
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
    சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
    மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
    நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் உபநிடதம், kakapusundar, kakapusundar upanidatham, siththarkal