பட்டினச் சித்தர் ஞானம் 36 - 40 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 36 - 40 of 101 பாடல்கள்


36. போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடக்கே
கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் - காட்டிடில்   
தாழ்வுறாய் நெஞ்சே தராதா மாயெங்கும்
மூழ்வா னதையுயிர்போம் முன்.

விளக்கவுரை :

37. முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னும் தெரியலையோ பேய்மனமே - தன்னை
அறியா திருந்தால் அவனறிவானோ
குறியான புத்தியென்றே கொள்.

விளக்கவுரை :

38. கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே - மெள்ளமெள்ள
அய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே
தேர்ந்ததாய்ந்து பார்த்துத் தெளி.

விளக்கவுரை :

39. தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் - தெளிந்தால்
சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும்
பகலிர வில்லாத பதி.

விளக்கவுரை :

40. பதிபசுபா சங்களையும் பற்றி யுருவப்
பதிதனிலே தங்கிப் பலரும் - கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை
காணா மலாமோ கணக்கு.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal