காகபுசுண்டர் ஞானம் 21 - 25 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 21 - 25 of 79 பாடல்கள்

     
21. விளையாடிப் போதமய மாக வுந்தான்
    வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
    நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாம லாரொருவ ருறவு மற்றே
    ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
    மவுனமென்று மந்தனையு மடக்கி நில்லே.

விளக்கவுரை :

    
22. நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
    நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர்போல் வேதபுரா ணங்காவ் யங்கள்
    மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
    திருடர்கள்தா னலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை யறியா மற்றான்
    வேரற்ற மரம்போலே விழுவார் பாரே.

விளக்கவுரை :
    
23. பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
    பார்த்தீப லிங்கத்தைப் பணியா மற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
    வீணர்கள்தாம் கத்தபம்போற் கதறு வார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
    செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தி னூடே
    கண்டவரே கயிலாசத் தேகந் தானே.

விளக்கவுரை :


24. தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்
    தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும்
ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்
    உதயகிரி பாராத வுலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
    வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
    கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.

விளக்கவுரை :
    
25. பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
    பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும்
    அடயோக மென்பார்க ளாகா தப்பா!
சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே
    சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது
    வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal