பட்டினச் சித்தர் ஞானம் 96 - 101 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 96 - 101 of 101 பாடல்கள்


96. நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே - நெஞ்சே   
கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளு கருத்துள்.

விளக்கவுரை :


97. உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை - உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்து நீ ஓது.

விளக்கவுரை :

98. ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை - ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய வணுகாமல் காக்கும்.

விளக்கவுரை :

99. காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் - நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
யுந்து மதையுணர்ந்தில் வாழ்.

விளக்கவுரை :

100. வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை - ஏழை
வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி.

விளக்கவுரை :

101. பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாங்கியிருந் தானை - துணிவாய்ப்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal