காகபுசுண்டர் உபநிடதம் 6 - 10 of 31 பாடல்கள்

காகபுசுண்டர் உபநிடதம் 6 - 10 of 31 பாடல்கள்

     
6. சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
    தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
    விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
    விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
    தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.

விளக்கவுரை :

    
7. கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
    கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து   
தள்ளடா பிராணாதி வாயு வைந்து
    சார்வான மனம்புத்தி தானி ரண்டு
விள்ளடா பதினேழு தத்து வங்கள்
    விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
    சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே.

விளக்கவுரை :
    
8. நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
    நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
    கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
    ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
    சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே.

விளக்கவுரை :
    
9. தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
    தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
    வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
    கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
    காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே.

விளக்கவுரை :
    
10. கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
    கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
    உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
    தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
    விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் உபநிடதம், kakapusundar, kakapusundar upanidatham, siththarkal