காகபுசுண்டர் ஞானம் 76 - 79 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 76 - 79 of 79 பாடல்கள்


76. பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
    புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
    அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
    உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
    பாலகனே சவாதோடு புனுகு சேரே.

விளக்கவுரை :
    
77. சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
    தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
    அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
    நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
    வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.

விளக்கவுரை :
    
78. வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
    வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
    திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
    நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
    வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே.

விளக்கவுரை :
    
79. பாரடா பரப்பிரமத் தூடே சென்று
    பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
    நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
    குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
    வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal