காகபுசுண்டர் ஞானம் 61 - 65 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 61 - 65 of 79 பாடல்கள்

     
61. தானென்ற பலரூப மதிகங் காணுந்
    தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
    உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
    தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
    குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே.

விளக்கவுரை :

    
62. நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
    நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
    சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
    மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
    ஆகாய வீதிவழி யாட்டும் பாரே.

விளக்கவுரை :

    
63. ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
    அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
    பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
    காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
    வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே.

விளக்கவுரை :

64. போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
    புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
    அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
    நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
    வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே.

விளக்கவுரை :
    
65. பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
    பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
    ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
    நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
    விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal