பட்டினச் சித்தர் ஞானம் 26 - 30 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 26 - 30 of 101 பாடல்கள்


26. அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ - மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை.

விளக்கவுரை :

27. நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் - கலையறிந்து
மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த
வீரனையும் தேட விரும்பு.

விளக்கவுரை :

28. விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா
இரும்புண்ட நீர்போல வேகும் - கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம்.

விளக்கவுரை :

29. வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே - வெளிச்சமற
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு.

விளக்கவுரை :

30. இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொருட்டனையே மூடு ஐம்புலனால் - திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா தது.

விளக்கவுரை :

பட்டினச் சித்தர், பட்டினச் சித்தர் ஞானம், pattina siththar, pattina siththar gnanam, siththarkal