காகபுசுண்டர் ஞானம் 46 - 50 of 79 பாடல்கள்

காகபுசுண்டர் ஞானம் 46 - 50 of 79 பாடல்கள்

     
46. பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
    பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
    நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
    சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
    வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே.

விளக்கவுரை :
    
47. வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
    வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
    கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
    நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
    வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே;   

விளக்கவுரை :

48. கேளப்பா இப்படியே பிரள யந்தான்
    கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
    அகண்டமென்ற பிரமத்தி லடங்கு வார்கள்;
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்;
    நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூப மானேன்
    வடவரையின் கூடுதொத்தி யிருந்தேன் பாரே.

விளக்கவுரை :
    
49. பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
    பார்தனில்நா னிருந்தேன்எத் தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவா ருண்டோ?
    ஆதியென்ற சித்திக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
    வெற்றியுட னெனையெடுத்து முத்த மிட்டார்;
காரடா கைலையின்மே லிருக்கச் சொன்னார்!
    காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே.

விளக்கவுரை :

    
50. காகமென்ற ரூபமா யிருந்து கொண்டு
    காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
    வெகுதூரம் சுற்றியின்னம் விவரங் காணேன்;
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
    மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தா னண்ட மேவி
    நடுவணைய முச்சிநடு மத்தி தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் சித்தர், காகபுசுண்டர் ஞானம், kakapusundar, kakapusundar gnanam, siththarkal