அகப்பேய் சித்தர் பாடல்கள் 11 - 15 of 90 பாடல்கள்
11. பிருதிவி பொன்னிறமே அகப்பேய்
பேதைமை யல்லவடி
உருவது நீரடியோ அகப்பேய்
உள்ளது வெள்ளையடி.
விளக்கவுரை :
12. தேயு செம்மையடி அகப்பேய்
திடனது கண்டாயே
வாயு நீலமடி அகப்பேய்
வான்பொருள் சொல்வேனே.
விளக்கவுரை :
13. வான மஞ்சடியோ அகப்பேய்
வந்தது நீகேளாய்
ஊனம தாகாதே அகப்பேய்
உள்ளது சொன்னேனே.
விளக்கவுரை :
14. அகார மித்தனையும் அகப்பேய்
அங்கென் றெழுந்ததடி
உகாரங் கூடியடி அகப்பேய்
உருவாகி வந்ததடி.
விளக்கவுரை :
15. மாகார மாயையடி அகப்பேய்
மலமது சொன்னேனே
சிகார மூலமடி அகப்பேய்
சிந்தித்துக் கொள்வாயே.
விளக்கவுரை :