கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 26 - 30 of 35 பாடல்கள்


கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 26 - 30 of 35 பாடல்கள்

26. வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே.

விளக்கவுரை :

27. சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.

விளக்கவுரை :

28. பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே.

விளக்கவுரை :

29. போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே.

விளக்கவுரை :

30. கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே.

விளக்கவுரை :

கடுவெளிச் சித்தர், கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு, kaduveli siththar, kaduveli siththar aanandha kalippu, siththarkal