கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 21 - 25 of 35 பாடல்கள்


கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 21 - 25 of 35 பாடல்கள்

21. ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு.

விளக்கவுரை :

22. ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்.

விளக்கவுரை :

23. எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.

விளக்கவுரை :

24. இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.

விளக்கவுரை :

25. பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.

விளக்கவுரை :

கடுவெளிச் சித்தர், கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு, kaduveli siththar, kaduveli siththar aanandha kalippu, siththarkal