இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 21 - 25 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 21 - 25 of 130 பாடல்கள்

21. அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

செவிதனிற்கே ளாதமறை தாண்ட வக்கோனே - குரு
செப்பில் வெளி யாமல்லவோ தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

கட்டளைக் கலித்துறை

23. மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
          வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
          தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.

விளக்கவுரை :

நேரிசை வெண்பா

24. போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்,
          மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம்,
வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால்,
          ஓதுபிர மத்துற்றக் கால்.

விளக்கவுரை :

தாண்டவராயக்கோன் கூற்று

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
          தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
          ஆனந்தக் கோனாரே.         

விளக்கவுரை :

25. ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
          அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
          மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன்.           (தாந்)

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal