அகத்தியர் ஞானம் 36 - 40 of 49 பாடல்கள்



அகத்தியர் ஞானம் 36 - 40 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

36. பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
          பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
          விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
          காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
          சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

விளக்கவுரை :
           
ஞானம் - 5

37. கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
          கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
          சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
          நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
          துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

விளக்கவுரை :

[ads-post]

38. கூடப்பா துரியமென்ற வாலை வீடு
          கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
          நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
          ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
          செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.

விளக்கவுரை :

39. ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்;
          அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்
          உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்;
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு;
          மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்;
          பாடினேன் வேதாந்தம் பாடினேனே.
விளக்கவுரை :

40. பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்;
          பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்;
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்;
          நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்;
          நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்;
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்
          ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே. 

விளக்கவுரை :

அகத்தியர் ஞானம், அகத்தியர், agathiyar, agathiyar nganam, siththarkal