இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 - 90 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 86 - 90 of 130 பாடல்கள்

86. எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
          ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
          நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.      

விளக்கவுரை :

மயிலொடு கிளத்தல்

87. ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
          ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
          குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.      

விளக்கவுரை :

88. இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
          இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
          நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.      

விளக்கவுரை :

89. கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
          காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
          பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.

விளக்கவுரை :

அன்னத்தொடு கிளத்தல்

90. சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.   

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal