சட்டை முனி சித்தர் பாடல்கள் 86 - 90 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  86 - 90 of 200 பாடல்கள்

86. பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;
          பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு.
மங்குகின்ற மோகமென்ன? மகேசன் கூறு;
          மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்ச்
          சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்
          சூனியமாய் ஞானமெல்லாந் தோற்று மாறே.

விளக்கவுரை :

87. மாறான பெண்ணாசை விட்டே னென்பார்;
          மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
          சதாசிவனால் முடியாது; மற்றோ ரேது?
கூறான விந்துவிடக் கோப மோகங்
          குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
          விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே.

விளக்கவுரை :

88. வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை
          வேதாந்த மென்றதொரு வாளி னாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே
          சச்சிதா னந்தவெள்ளச் சார்பி னாலே;
ஒட்டினா ரொட்டினநிர்க் குணத்தின் மட்டும்
          உத்தமனே யதுவல்லோ ஞான வீதி?
தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்
          செகசால வித்தையென்று தெளிந்து பாரே.

விளக்கவுரை :

89. தெளிவதுதா னெளிதல்ல வாய்ப்பேச் சல்ல;
          சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்
          அதரமுண்டு கூடுது போக மென்பார்
கழிவதுதான் காலேது வாசி யேது
          கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது?
ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகர்
          ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே.  

விளக்கவுரை :

90. காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு;
          கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு;    
பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு;
          புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு;
தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில்
          சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு;
ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்;
          உலகத்திற் றிரியாதே விண்ணி லாடே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal