சட்டை முனி சித்தர் பாடல்கள் 56 - 60 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  56 - 60 of 200 பாடல்கள்

56. எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி;
          ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்
எழும்பாமல் கருவிகளை யிருக்கச் சாடி
          இருத்தினவன் சிவயோகி வாத யோகி;
எழும்பாம லடிப்பதற்குச் சூட்சஞ் சொல்வேன்;
          என் மக்காள்! மவுனத்தே யிருந்தாற் போகும்;
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால்
          ஏதுமில்லை சுத்தவெளி யிருளும் போச்சே.

விளக்கவுரை :

57. போச்சென்றே இருக்கிறதோர் ஞானத் துக்குப்
          புகழான வல்லமைதா னென்ன மைந்தா!
வாச்சென்ற அகண்டத்துள் வரைக ளாறு
          மருவினால் சடத்தோடே யவனே சித்தன்;
நீச்சென்ற வரைப்பார்த்து வாரேன் மக்காள்
          நில்லுங்கோள் குகையினுள்ளே யென்று சொல்லித்
தோச்சென்ற பூரணத்திற் சொக்கி நின்ற
          சுந்தரா னந்தன்வந்து தொழுதிட்டானே.

விளக்கவுரை :

58. தொழுதுகொண்டு பதம் பிடித்த அகண்டத் துள்ளே
          சொக்குகிறோ மென்றுசொன்ன சுந்தரமே பையா!        
விழுதுகொண்ட ஆலைப்போல் நெட்டிட் டேறி
          வெளிகடந்தே ஆறுகலங் கண்டு வாரேன்;
முழுதுகண்டா னென்பிள்ளை யென்று கீர்த்தி
          மூட்டிவைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுதுகொண்டு வருகிறேன் திரும்பா விட்டால்
          பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே.

விளக்கவுரை :

59. பாரப்பா அகண்டவெளி சுத்தக் கானல்
          பார்ப்பதற்கோ அங்கொன்று மிடமே யில்லை;
நேரப்பா ரவிகோடி வன்னி கோடி
          நேரான மதிகோடி கண்ணோ கூசும்
ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி
          அதற்குள்ளே செல்லரிது மைந்தா போபோ;
காரப்பா குகையொன்று பட்டங்கட்டிக்
          கடுங்குளிகைச் சோடிட்டுக் கலந்திட்டேனே.

விளக்கவுரை :

60. கலந்திட்டே னொருவரையில் நாத வோசை
          கண்கொள்ளா வெளிக்குள்ளே கலக்கமாச்சு;
சலந்திட்டேன் மறுவரையி லிடியோ கோடி
          கண்கெட்டேன் மதிக்கெட்டேன் காதுங் கெட்டேன்;
(,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,)
கலந்திட்டேன் மூவரையிற் காந்திக் குள்ளே
          கடுகவந்தேன் கொங்கணரை யழைத்திட் டீரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal