இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 11 - 15 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 11 - 15 of 130 பாடல்கள்

நாராயணக்கோன் கூறுதல்

கொச்சகக் கலிப்பா

11. சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
          பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
          நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே.

விளக்கவுரை :

12. கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
          பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
          தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே. 

விளக்கவுரை :

கண்ணிகள்

13. மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

14. சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

15. ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal