சட்டை முனி சித்தர் பாடல்கள் 76 - 80 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  76 - 80 of 200 பாடல்கள்

76. வாறான குருவினுடை வாழ்க்கை கேளு
          மகத்தான சடையின் மேல் மதியுஞ் சூட்டித்
தாறான நெற்றியிலே தீயை வைத்துச்
          சர்ப்பமல்லோ ஆபரண மாகப் பூண்டு
வீறான கரித்துகிலை மேலே போர்த்து
          விளக்கியதோர் புலித்தோலை யிடையிற் கட்டிக்
கூறான சுடுகாட்டிற் குடியு மாகிக்
          கொள்கின்றார் பலியெடுக்கக் கொள்கின் றாரே.

விளக்கவுரை :

77. பலியெடுத்த குருவினிட வாம பாகம்
          பகிர்ந்துநின்ற என் தாயின் பரிசு கேளு;
பொலியெடுத்த அட்டமா சித்திநிற்கப்
          புகழ்பெரிய ரத்னவகை யாரம் பூண்டு
நலிவில்லா யோகாப்பி யாசஞ் செய்து
          நண்ணுமிரு பதச்சேவை காண்ப தற்கே
ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர்
          ஒன்றாகக் கணநாதர் போற்று வாரே.

விளக்கவுரை :

78. அறிந்துகொள் என்தாயே துரைப்பெண் ணப்பா!
          அப்பனோ எருதேறும் ஏழை யேழை       
அறிந்துகொள் இவளைமுன்னே யையா வைத்தே
          ஆதரித்துக் கேட்டதெல்லா மருளிச் செய்வாள்
அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி
          ஆத்தாளைப் பூசித்தா லறுப தீவாள்
அறிந்துகொள் சடமெல்லா மவளே யாச்சே
          அப்பனுக்கு மெலும்போடு நரம்பி ரண்டே.

விளக்கவுரை :

79. இரண்டான வாயுவினி லொன்று சத்தி
          ஈராகச் சிவமேது பிராண வாயு
ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு
          யோகமுமாம் ஞானமுமா முற்றே யேறு
தண்டான சுழுமுனைதா னடுவில் நிற்குஞ்
          சாதகமா யிதற்குள்முக் கிரந்தி யுண்டு
நன்றான சுழுமுனையிற் பிராண னேரில்
          நாதாந்த யோகமிது நாடிக் காணே.

விளக்கவுரை :

80. காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்
          கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;
ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு
          உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்
பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்
          புசுண்டருக்குச் சித்திகை லாய தேகம்
தோணப்பா நவகோடி மானா கண்டார்
          சுகயோக மாவது இந்தத் துறையு மாமே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal