பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 121 - 125 of 129
பாடல்கள்
121. குருவென்னும் ஆசானி னுருவெ டுத்துக்
குறியான ஞானந்துப் பாக்கியாக்கி
அருளென்னும் அருளையே உண்டை யாக்கி
ஆனந்த மாகவே அதைக்க டந்தே
மருளென்னு மாதர்மன நெறியைத் தொட்டு
வாங்காம லெரிந்திட நெட்டை யிட்டு
பருவளைக் குள்ளேயே பட்ட தென்றே
பற்றானைப் பற்றிநின் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
122. கன்னான் குகையிலே கான்ம றிப்போம்
கருமா னுலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை யாக்குவோம்
கருதி யருகல்வி ஒப்பஞ் செய்வோம்
மின்னார்கள் பாசத்தை விட்டே யெரிப்போம்
மெய்ப்பொருட் குறிகண்டு விருப்பை யடைவோம்
பன்னாதே பன்னாதே சும்மா விருந்து
பராபரஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
123. சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினி லுறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
சுகமான பெண்ணையே சுகித்தி ருப்போம்
ஆதிப் பிர்மர்கள் ஐந்து பேரும்
அறியார்கள் இதையென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
124. நெட்டெழுத் ததனிலே நிலைபி டித்து
நீங்கா வெழுத்திலே வாலை முறுக்கி
விட்டவ் வெழுத்திலே படம்வி ரித்து
விண்ணின் வழியிலே மேவி யாடிப்
பட்ட வெழுத்தையும் பதிந்தி ருப்போம்
பன்னிரண் டாமெழுத்தினிற் பன்னிக் கூடித்
திட்டமுட னெமக்கருள் தேசிக னார்தம்
சீர்பாதஞ் சேர்ந்தோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
125. ஊசித்துளைக் குடத்தினிற் பாம்பை யடைப்போம்
உலகெலாஞ் சுற்றி யுலாவிவருவோம்
மாசுள்ள பிறவியை மறந்தி ருப்போம்
மனமொத்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
மாசுப் புலன்களை இரைகொ டுப்போம்
மனமுற்ற உச்சியிலேறி யாடுவோம்
பேசு மெழுத்தையும் விழுங்கி விடுவோம்
பிறப்பிறப் பற்றோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :