அகத்தியர் ஞானம் 21 - 25 of 49 பாடல்கள்



அகத்தியர் ஞானம் 21 - 25 of 49 பாடல்கள்

agathiyar-gnanam

ஞானம் - 4

எண்சீர் விருத்தம்

21. பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
          பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
          கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
          மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
          வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.

விளக்கவுரை :

22. ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
          அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்        
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
          முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
          பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
          வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.
         
விளக்கவுரை :

[ads-post]

23. தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
          தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
          தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
          ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
          நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே.

விளக்கவுரை :

24. பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
          பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
          உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
          தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
          உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே.

விளக்கவுரை :

25. பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
          பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
          தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
          வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
          நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே.

விளக்கவுரை :

அகத்தியர் ஞானம், அகத்தியர், agathiyar, agathiyar nganam, siththarkal