அகத்தியர் ஞானம் 16 - 20 of 49 பாடல்கள்



அகத்தியர் ஞானம் 16 - 20 of 49 பாடல்கள்


agathiyar-gnanam
16. மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
          மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
          நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
          அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
          தளமான தீயில்விழத் தயங்கி னாரே;

விளக்கவுரை :
           
17. தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
          சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
          மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
          இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
          மாட்டினார் சிவனாருத் தரவினாலே.

விளக்கவுரை :

[ads-post]
           
18. உத்தார மிப்படியே புராணங் காட்டி
          உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
          கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
          சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்  
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
          பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.

விளக்கவுரை :
           
19. பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
          பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
          நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
          நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
          பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.

விளக்கவுரை :

20. கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
          கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
          அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
          உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!

விளக்கவுரை :

அகத்தியர் ஞானம், அகத்தியர், agathiyar, agathiyar nganam, siththarkal