கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 1 - 5 of 35 பாடல்கள்


கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 1 - 5 of 35 பாடல்கள்

பல்லவி

1. பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

விளக்கவுரை :

சரணங்கள்

2. சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?

விளக்கவுரை :

3. சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

விளக்கவுரை :

4. நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்.

விளக்கவுரை :

5. நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

விளக்கவுரை :

கடுவெளிச் சித்தர், கடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு, kaduveli siththar, kaduveli siththar aanandha kalippu, siththarkal