பத்திரகிரியார் பாடல்கள் 221 - 225 of 231
பாடல்கள்
221. உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்?
விளக்கவுரை :
222. ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
223. ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
224. காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில்
மூழ்குவதும் எக்காலம்?
விளக்கவுரை :
225. நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து
தவம்முடிப்பது எக்காலம்?
விளக்கவுரை :