6546. சூட்டினேன் இச்செம்பு
சிடிகைவேதை சிறப்பான செம்புகளு மின்னமுண்டு
வாட்டமுடன் இச்செம்பை
மதியில்தானும் வளமுடனே பத்துக்கு ஒன்றுதாக்க
நாட்டமுடன் வயததுவும்
என்னசொல்வேன் நலமான மாற்றதுவும் ஆணிக்காறு
ஆட்டிடையன் கதைபோலே
இருக்கவேண்டா மப்பனே செம்பிருக்க வலைவாருண்டோ
விளக்கவுரை :
6547. உண்டான வெள்ளிதனை
யுருக்கிமைந்தா உத்தமனே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து
கண்டதமாய் வாரடித்து
புடத்தைப்போடு கண்மணியே என்னசொல்வேன் மாற்றெறொயெட்டு
பண்டிதங்கள் பொய்யாது
ஆயுர்வேதம் பாரினிலே கலைவகுத்து நிலைவகுத்து
விண்டிடவே போகரேழாயிரத்தை
விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டம்யேழே
விளக்கவுரை :
[ads-post]
6548. ஏழான காண்டமது
கடைக்காண்டத்தில் எழிலான சிவயோக தவயோகங்கள்
ஆழவே வைப்புமுதல் சிடிகைவேதை
வப்பனே யானுரைத்தே னுந்தமக்கு
வாழவென்றால் இந்நூல்தான்
சத்தகாண்டம் வையகத்து மாண்பருக்கும் போதாதுண்டோ
மீழவே கருவறிந்து
பொருளறிந்து மிக்கான குருவறிந்து நினைவாய்க்கொள்ளே
விளக்கவுரை :
6549. கொள்ளவென்றால் சாத்திரத்தை
யுன்னிப்பாரு கோடான கோடிமுறை குறிப்புசொன்னேன்
விள்ளவே மனோன்மணியாள்
பதாம்புயத்தை விருப்பமுடன் பணிந்தாக்கால் எல்லாஞ்சித்தி
உள்ளதொரு பொருளெல்லாம்
இதிலேதோயும் வுத்தமனே காண்டமது ஏழுங்கண்டால்
கள்ளமது வாறாது புண்ணியவானே
கருத்துடனே பாடிவைத்தேன் காண்டமேழே
விளக்கவுரை :
6550. கண்டமாமின்னமொரு போக்குசொல்வேன் கண்மணியே விண்மணியே கருவாய்க்கேளு
வேண்டியதோர் கருமான
வினோதமுண்டு வித்தகனே நாதாக்கள் மறைத்துவைத்தார்
தூண்டியே பொருளறிந்து
தொடர்பறிந்து தூய்தான சாத்திரத்தின் நிலையறிந்து
ஆண்டியெனுஞ் சித்தர்முனி
பதமறிந்து வப்பனே கருமுறைகள் சொல்வேன்யானே
விளக்கவுரை :