போகர் சப்தகாண்டம் 6871 - 6875 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6871 - 6875 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6871. ஆச்சப்பா இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி வரியவானே
மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான காலாங்கி நாதரப்பா
பாச்சலுடன் பிரளயங்கள் வந்தபோது பாங்கான மலைமீதில் இருக்குங்காலம்
மாச்சலுடன் தவயோகி ரிஷியார்தம்மை மன்னவனே கண்டவதிசயத்தைக் கேளே

விளக்கவுரை :


6872. கேளப்பா தேகமது கூர்மவர்ணம் கெடியான திருமுகந்தான் மனுஷரூபம்
வாளப்பா நெடுங்காலந் தவசிருந்து வளமையுடன் காலாங்கி மலைமேற்றானும்
ஆளப்பா பிரளயங்கள் வந்தபோது வப்பனே தவசிருந்த சித்துமாகும்  
காளப்பா திரேதாயினுகத்தில்தானும் கருவான மலைதனிலே இருந்தசித்தே

விளக்கவுரை :

[ads-post]

6873. சித்தான புலிப்பாணி சிறியபாலா சிறப்புள்ள வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
பத்தியுடன் காலாங்கி நாதர்தாமும் பாருலகில் திரேதாயினுகத்திலப்பா
சத்தியங்கள் தவறாமல் தவசுசெய்து சாங்கமுடன் பிரளயங்கள் வந்தபோது
சுத்தியே நிற்பதற்கு இடங்கொள்ளாமல் சுந்தரனார் மலைமீதில் ஏறினாரே

விளக்கவுரை :


6874. ஏறினார் காலாங்கி மலையின்மேலே எழிலான பிரளயங்கள் வந்தபோது
மீறியே யாகங்கள் செய்துகொண்டு மிக்கான மலைகளிலே இருக்கும்போது
கூறியதோர் வராகமென்ற ரிஷியார்தாமும் கொற்றவனார் மலையதனில் தவசிருந்தார்
கோறியே காலாங்கி நாதர்தாமும் கொப்பெனவே தவசியிடம் சென்றார்பாரே

விளக்கவுரை :


6875. பாரேதான் எனதையர் காலாங்கிநாதர் பாங்கான மலைதனிலே தவசிருந்த
சீரான வராகரிஷி தன்னைத்தானும் சிறப்புடனே காலாங்கி காணும்போது
தீரான வுருவமது வராகம்போலும் தீர்க்கமுள்ள திருமுகந்தான் மனிதரூபம்
நேரேதான் தவயோகஞ் செய்துகொண்டு நேர்மையுடன் தானிருந்த ரிஷிகண்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar