6621. தாக்கவே கோழியது புடமதாக்கி
தண்மையுள்ள பூபாலா போட்டாயானால்
நோக்கமுடன் வோடதனை
யுடைத்துப்பாரு வுத்தமனே செந்தூரமென்னசொல்வேன்
ஆக்கமுடன் செந்தூரம்
அருணன்போலாம் வப்பனே நாதாக்கள் கூறவில்லை
வாக்கதுவும் பொய்யாது வருண்மைந்தாகேள்
வண்மைபெற செந்தூர வேதைதானே
விளக்கவுரை :
6622. தானான வேதைமைகஞ்
சாற்றக்கேளிர் தண்மையுள்ள பூபாலாதருமவானே
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிவண்ணம்
பானான பராபரியாள்
பாதம்போற்றி பாருலகில் மாண்பர்களும் பிழைக்கவென்று
தேனான சிவயோக நிலையில்நின்று
தேற்றமுடன் வேதைமுகங் கூறுவேனே
விளக்கவுரை :
[ads-post]
6623. கூறுவேன் செந்தூரந்
தனையெடுத்து குணமான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
மாறுதலாய்க் குகையிலிட்டு
வுருக்கிமைந்தா மார்க்கமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
தேறுதலாய் மாற்றதுவும்
என்னசொல்வேன் தேற்றமுடன் எட்டரைக்கு ஆணிக்கொக்கும்
கூறுதலாய்ப் பிறவியென்ற
தங்கமாகும் குணமான செந்தூர வேதைகாணே
விளக்கவுரை :
6624. காணவே யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
தோணவே செம்பதனை
யுருக்கிமைந்தா துப்புரவாய் இடைக்கிடைதான் செந்தூரத்தை
வேணமட்டும் செம்புருக்கிக்
கிராசமீவாய் வித்தகனே செம்பதுவுங் களங்கமாகும்
மாணமருங் கல்வியுள்ள
பூபாலாகேள் மகத்தான செம்பதனை யூதிப்போடே
விளக்கவுரை :
6625. ஊதவே செம்பதுவும்
தங்கச்செம்பாம் வுத்தமனே நாதாக்கள் மறைத்தசெம்பு
நீதமுடன் செம்பெடுத்து
செப்பக்கேளும் நிஷ்களங்கமானதொரு வெள்ளிதன்னை
தோடமுடன் நூற்றுக்கு
ஒன்றுசேர்க்க துப்புரவாய் மாற்றதுவும் பதினாறாகும்
வாதமது காணவென்றால்
இதுவேவாதம் வளம்பெரிய நாதாக்கள் வாதம்பாரே
விளக்கவுரை :