போகர் சப்தகாண்டம் 6566 - 6570 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6566 - 6570 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6566. வார்க்கவென்றால் மணியதுவும் உருகியல்லோ வளமான கெம்பினுட தளம்போலாகும்
தீர்க்கமுடன் தளமெடுத்த சாணைதன்னில் திறமுடனே தான்கொடுத்து மதியம்போண்டு
ஏற்கவே யிவ்வேதை சிடிகைவேதை எழிலான கெம்பினுட தளந்தானாச்சு
பூர்க்கவே சாணைதனில் மணிகொடுத்தால் புகழான கெம்பினுட ஜோதிதானே

விளக்கவுரை :


6567. ஜோதியாங் கெம்பினுட மகிமைதன்னை சுந்திரனார் சித்துமுனி மறைத்துவைத்தார்
வாதிகளும் காணாமல் மதியம்பூண்டு வண்மையுடன் கைமறைப்பைத் தெரியாமற்றான்
நீதியுடன் சாத்திரங்கள் படித்தயர்ந்து நிஷ்களங்க மாயிருந்தார் கோடிபேர்கள்
வீதியெஉங் கொல்லனது மாளிதன்னில் விரும்பூசி விற்றதொரு கதையுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

6568. கதையான கதைகாட்டி மையம்பூண்டு காசினியில் தான்மறைத்தார் வினோதவித்தை
கெதையான உப்பினிட கெதையைச்சொன்னேன் கெணிதமுடன் எண்ணிகண்டு காணாமற்றான்
விதைபோட்டால் சுரையொன்று காய்க்குமோசொல் வித்தகனே நூல்களெல்லாம் வினயங்கூறி
உதயம்போல் கெம்புவைப்பு இருக்க உத்தமனே வெகுதேசஞ் சென்றார்பாரே

விளக்கவுரை :


6569. பாரேதான் மணிதனையே சாணைதன்னால் பக்குவமாய்த் தான்பொடித்து ஒளியுங்கொண்டு
நேரேதான் வணிகரிடஞ் சென்றாயானால் நெடிதான செம்பதுவும் பிறவியென்று
சீரேதான் ஜெகத்திலுள்ள மாண்பரெல்லாம் ஜெகதலத்தில் பிறவியுள்ள கல்லேயென்று
தீரேதான் ஜெகத்திலுள்ள மாண்பரெல்லாம் செப்பிடுவார் பின்னொன்றும் செப்பார்தானே

விளக்கவுரை :


6570. தானான கெம்பதனை யார்தான்செய்வார் தண்மையுள்ள புலிப்பாணி மன்னாகேளு
கோனான நாதாக்கள் சித்துதாமும் குவலயத்தில் மறைத்துவைத்தார் நூல்களெல்லாம்
தேனான நூல்களெல்லாம் உளவாராய்ந்து தேற்றமுடன் ஓதிவைத்தேன் உந்தமக்கு
பானான பரஞ்சுடரே போற்றிசெய்து பாலகனே சதாநித்தம் துதிப்பாய்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar