போகர் சப்தகாண்டம் 6421 - 6425 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6421 - 6425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6421. சென்றாரே சீனபதிக் கடலோரத்தில் சிறப்புடனே போகமுனிநாதர்தாமும்
வென்றிடவே சிலநாளங்கிருந்துமல்லோ வேகமுடன் மேருவடபாகத்தில்
குன்றான மலையோரஞ் செல்லும்போது கூறான சாம்பலென்ற குகையோரத்தில்
அன்றுமல்லோ செம்புரவி தன்னைத்தானும் அங்ஙெனவே போகர்முனி கண்டார்தாமே

விளக்கவுரை :


6422. தானான குளிகையது பூண்டுகொண்டு தாரணியில் வடபாகங் குகையோரத்தில்
மானான மகமேரு தன்னைப்போலே மகத்தான வசுவதா புரவிதன்னை
பானான சூரியன்போல் புரவிதானும் பாங்குடனே கண்டவரும் பிரமித்தேங்கி
தேனான மனோன்மணியை மனதிலுன்னி தேற்றமுடன் பிறவியிடம் இறங்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

6423. இறங்கியே போகரிஷி முனிவர்தானும் யெழிலான செம்புரவி யருகில்வந்து
திறமுடனே குளிகையது விட்டுமல்லோ தீர்க்கமுடன் அஞ்சலித்து கரங்குவித்து
நிறமுடைய செம்புரவி தன்னைக்கண்டு நிட்களங்கமான பரவசமுங்கொண்டு
குறவனைப்போல் சித்துமுனி ரிஷியார்தாமும் கும்பிட்டு முடிவணங்கி பணிந்திட்டாரே

விளக்கவுரை :


6424. பணிந்துமே போகரிஷி முனிவர்தாமும் பட்சமுடன் முடிவணங்கி நிற்கும்போது
மணியான செம்புறவி தானுங்கண்டு மகத்தான போகரிஷி யாரென்றென்னை
அணியான காலாங்கி நாதர்பாதம் அவர்பாத சீஷனென்று யானுரைத்தேன்
துணிவுகொண்டு வடியேனுங் கூறும்போது துப்புரவாய் என்மீதில் கருணையாச்சே

விளக்கவுரை :


6425. கருணையெனும் வாய்மொழியை யறிந்துயானும் கர்த்தாவே எந்தனையாதரிக்கவென்று
அருணனைப்போல் மின்னுகின்ற புரவிதன்னை அடிவணங்கி முடிவணங்கி தொழுதேன்யானும்
வருணரிஷி வளர்த்ததொரு புரவியொன்று வாகுடனே யாசீர்மம் மிகவுங்கூறி
தருணமது வந்ததொரு காரியத்தை சாங்கமுடன் உரைக்கவென்று கேட்கலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar