6681. கேளேதான் பூரமது இறுகியல்லோ
நெடியான சூதமது மடங்கிநிற்கும்
வீளேதான் பூரமதை
எடுத்துமைந்தா விருப்பமுடன் பின்னுமல்லோ வதிதங்கேளு
நாளேதான் போகாமல் நாதவானே
நவிலுகிறேன் பஞ்சபூத வாராதாரம்
சூளேதான் துருசு
வெடியுப்புக்காரம் சுந்தரனே வருஞ்சாரம் சீனந்தானே
விளக்கவுரை :
6682. சீனமாங் கரியுப்புத் தானுஞ்சேர்த்து சிறப்புடனே செவ்வாலம் பாலாலாட்டி
சோனமதாம் புரத்துக்
கங்கிபூட்டி சோராமல் ரவிதனிலே காயப்போடு
கானமருஞ் சுண்ணாம்பு
சீலைசெய்து கடுரவியால் பின்னுமங்கே காயவைத்து
ஊனமதுவாராமல் மணல்தானப்பா
வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
6683. புடமாறீத் தீர்ந்தபின்பு
எடுத்துப்பாரு புகழான வாறுவகை சரக்குதன்னால்
தடமான பஞ்சபூத வாராதாரம்
தண்மையுடன் சரக்கதுவும் சேர்த்துமல்லோ
திடமாகப் புகழடங்கி வீரடங்கி
தீர்க்கமுள்ள பூரமது என்னசொல்வேன்
மடலான பூரமது வுருகியல்லோ
மார்க்கமுடன் தந்தம்போலிருக்கும்பாரே
விளக்கவுரை :
6684. தந்தமாம் பூரமது கட்டுமானால்
தண்மையுள்ள வேதையது என்னசொல்வேன்
அந்தமுடன் பூரமதை
எடுத்துபாலா ஆகாகா வராகமென்ற நெய்யினாலே
பந்தமுடன் சுருக்கதுவும்
நாலுசாமம் பாகமுடன் தான்கொடுக்க முழுகட்டாகும்
விந்தையுடன் பூரமது
சிடிகைவேதை விண்ணுலகில் மண்ணுலகில் காணார்தாமே
விளக்கவுரை :
6685. காணாமல் சித்துமுனி
நாதர்தாமும் கருவான சாத்திரங்கள் அதிகஞ்சொன்னார்
தோணாத கருக்குருவும்
முறைபாடெல்லாம் தோறாமல் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
வீணாதான் போகாமல்
சாத்திரத்தில் விட்டகுறை இருந்தாலே லபிக்குமென்று
மாணாக்கள் அறியவென்று
பலநூலெல்லாம் மானிலத்தில் பலவிதமாய்க் கூறினாரே
விளக்கவுரை :