போகர் சப்தகாண்டம் 6831 - 6835 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6831 - 6835 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6831. கிழக்கான பூமியப்பா நெடுந்தூரந்தான் கிளையான யாறுண்டு சுனைதானுண்டு
பழக்கமதாய் மாண்பர்களும் போனதில்லை பாங்கான குறும்பருட நாடேயாகும்
அழகான பூமியது சொல்லவொண்ணாது வப்பனே கெந்தகந்தான் விளையும்நாடு
தழலான செடிமரங்கள் பூண்டுமில்லை தாரணியைக் குளிகைகொண்டு கண்டிட்டேனே

விளக்கவுரை :


6832. இட்டதொரு கிழக்குக்கு தெற்கேயப்பா எழிலான திருச்சங்கு மைந்தனல்லோ
சட்டமுடன் ஆண்டிருந்த ராஜ்ஜியத்தின் சதுரான மேற்புறத்தின் ஓடையப்பா
வட்டமுள்ள பூமியது நெடுந்தூரந்தான் வளமான தாளகத்தின் பூமியாகும்
திட்டமுடன் பூமியெல்லாந் தாளகந்தான் திரமான நடுமையேறி தாரமாமே

விளக்கவுரை :

[ads-post]

6833. அரிதான வரிதார மென்னசொல்வேன் வப்பனே வதின்கீழே மனோசிலையுமாகும்
சரிதான விளைவல்லோ பூமியெல்லாம் சாங்கமுடன் தாளகத்தின் பூமியாகும்
பரியான தங்கமது விளையும்நாடு பாருலகில் நாதாக்கள் கண்டதுண்டு
திரிலோகந்தான் மதிக்கும் தங்கமப்பா தீர்க்கமுடன் விளைகின்ற நாடுதானே

விளக்கவுரை :


6834. நாடான நாடதுதான் சொல்வேனப்பா நலமான புலிப்பாணி நன்புள்ளானே
காடான காடெல்லாம் யான்திரிந்து கனமான குளிகையது கொண்டுமல்லோ
மேடான பூமியது திரிந்துமேதான் மேன்மையுள்ள கற்பரிபாஷாணங்கண்டேன்
தாடாண்மை யுள்ளதொரு பாஷாணந்தான் தாரணியில் தங்கமிகச் செய்யலாமே

விளக்கவுரை :


6835. செய்யவே கற்பரிபாஷாணந்தன்னால் செயலான நவலோகம் வெல்லலாகும்
துய்யதொரு நவலோகம் நீறிப்போகும் துப்புரவாய் லோகங்கள் சத்துருவேயாகும்
வெய்யவே நடுமையந்தன்னிலப்பா வேட்கமெனும் அவுல்பாஷாணந்தானாகும்
பையவே யதின்கீழே தானிருக்கும் பாங்கான ஜலபாஷாணந்தான்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar