போகர் சப்தகாண்டம் 6726 - 6730 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6726 - 6730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6726. சேரப்பா அத்தியுட வித்துதானும் செயலான அழிஞ்சியுட வித்துதானும்
கூரப்பா சாரத்தின்வித்துதானும் குறிப்பான வூசத்தின் வித்துதானும்  
நேரப்பா முருக்கிலையின் வித்துதானும் நெடிதான எருக்கினிட வித்துதானும்
ஆரப்பா சூரியுட வித்துதானும் வப்பனே எல்லினுட வித்துகாணே

விளக்கவுரை :


6727. காணவே வகைவகைக்கு பலந்தானொன்று கருத்தாகத் தான்வருத்து சூரணித்து
தோணவே சூரணத்தை ஒன்றாய்க்கூட்டி சோராமல் பசும்பாலில் சுத்தித்தேதான்
வேணதொரு சரிபாகஞ் சீனிசேர்த்து விருப்பமுடன் சீசாவிற் பதனம்பண்ணு
ஆணவங்கள் வுண்டாக இந்தபாகம் வப்பனே சரிகூட்டி பதனம்பண்ணே

விளக்கவுரை :

[ads-post]

6728. பண்ணவே முப்பூவுங் களஞ்சிசேர்த்து பண்மையுடன் மண்டலந்தான் கொண்டபேர்க்கு
நண்ணவே நடுச்சாம வயதுதன்னில் நாட்டமுடன் சிவயோகஞ் செய்யும்பேர்க்கு
திண்ணவே மண்டலந்தான் காயகற்பம் தீர்க்கமுடன் சமுசாரிக்கானவித்தை
வண்ணமுடன் இப்பாகஞ் சித்தருக்கு வளமையுடன் மறைத்துவைத்தார் வண்மைபாரே

விளக்கவுரை :


6729. பாரேதான் மண்டலங் காயாதியப்பா பாங்குபெற வுண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
நேரேதான் சமுசாரிக்கான கற்பம் நெடிதான துறவிகட்கும் உகந்தகற்பம்
சீரேதான் காயாதி கொண்டபின்பு தீர்க்கமுடன் வழலையது கொள்ளவேண்டும்
நீரேதான் வழலையது கைபாகந்தான் நீதியுடன் அறிவதற்கு இன்னங்கேளே

விளக்கவுரை :


6730. கேளப்பா புலிப்பாணி மன்னாபாரு கெடியான யோகங்கள் சாதிப்போர்க்கு
வாளேதான் சமுசாரி குடியுள்ளோர்க்கு வகுப்பான சிவயோகி வேடத்தோர்க்கும்
பாளேதான் யோகமது போகாமற்றான் பகருகிறேன் திராவக வழலையப்பா
சூளேதான் கைபாகஞ் செய்பாகந்தான் சூட்டுகிறேன் வரிசைமுறை யின்னங்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar