போகர் சப்தகாண்டம் 6661 - 6665 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6661 - 6665 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6661. புத்தியா மின்னமொரு போக்குசொல்வேன் புகழான வெள்ளியது பத்துக்கொன்று
வெற்றிபெற தானுருக்கி குருவொன்றீய வித்தகனே மாற்றதுவும் என்னசொல்வேன்
சத்தியமாய் எட்டரைதான் ஆணிக்கொக்கும் சன்மார்க்க புத்தியுள்ள பூபாலாகேள்
நித்தியமும் குருபதாம்புயத்தைப்போற்றி நீமகனே ஜீவித்து இருப்பீர்காணே

விளக்கவுரை :


6662. காணவே வாரடித்து புடந்தான்போடு கருவான வெள்ளியது பசுமையாகி
நீணவே தானிருக்கும் மாற்றோமெத்த நிஷ்களங்கமானதொரு தங்கமப்பா
ஆணவங்கள் தானொடுங்கி பதாம்புயத்தை வப்பனே எந்நாளும் மனதிலெண்ணி
காணவே கரங்குவித்து அஞ்சலித்து காசினியில் மர்மமதாய் வாழ்குவீரே

விளக்கவுரை :

[ads-post]

6663. வாழ்கவென்றால் செந்தூரம் பதனம்பண்ணு மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
வாழ்கவென்றால் செந்தூரந் தனையெடுத்து வளம்பெறவே செயரோகந் தன்னிலீவாய்
வாழ்கவென்றால் மேகமென்ற இருபதுக்கும் மகத்தான கசரோகந்தன்தனக்கும்
வாழ்கவென்றால் காயாதி கற்பம்போலே வண்மையுடன் தானருந்தி வண்மைகொள்ளே

விளக்கவுரை :


6664. கொள்ளவே அனுபானந் தன்னிலீய கொற்றவனே காசமது வாறும்போகும்
உள்ளதொரு பாண்டுவகையாறுந்தீரும் வுத்தமனே வாயுவென்ற தென்பதும்போம்
கள்ளமிலா பித்தமது நாற்பதும்போம் கயரோகஞ் சில்விஷங்களற்றுப்போகும்
வள்ளலுயர் மேகமென்ற குஷ்டரோகம் வண்மைபெறுந் தாமரையும் தானும்போமே

விளக்கவுரை :


6665. போமேதான் பொல்லாத ரோகம்போகும் போக்கான வாய்நாற்றம் வெள்ளைதீரும்
நாமேதான் சொன்னபடி நளிர்சுரங்கள் நலமிலாக் கிராணியது ஆறுந்தீரும்
வேமேதான் நேத்ரவலி தொண்ணூற்றாறும் விட்டகலும் மேனியது காந்திமெத்த
ஆமேதான் நாதாக்கள் கொண்டகற்பம் வப்பனே நாகசெந்தூரம்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar