6986. வணங்கவே இன்னம்வெகு
சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா
இணங்கினேன் ஜமதக்னி
முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
சுணங்கமது வாராமல்
ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி
மணங்கமழுந் திரணாக்கிய
முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
6987. தொழுதேனே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த
பழுதுபடா புலிப்பாணி
பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு
முழுதுமே மூதுலகில்
கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு
தொழுதுமே யவர்பாதம்
போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே
விளக்கவுரை :
[ads-post]
6988. பகரவே புஜண்டமகா
ரிஷியாருக்கு பண்புடனே வெகுகோடி சரணஞ்சொன்னேன்
நிகரவே
யவர்பாதந்தொழுதுபோற்றி நீதியுடன் தலைகுனிந்து முடிகள்சாய்த்தேன்
சகராஜபரிட்சித்து மன்னனுக்கு
சட்டமுடன் சோதிடங்கள் தாமுரைத்த
சுகரென்ற ரிஷியார்க்குச்
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
6989. பணிந்தேனே பலிப்பாணி மன்னவாகேள் பாருலகில் கும்பமென்ற யீசருக்கு
துணிந்துமே யவர்பாதந்
தொழுதுபோற்றி துப்புரவாய் சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
கணிதமென்ற மூலத்தின்
ஈசருக்கு கனகாபிஷேகமுடன் சரணஞ்சொன்னேன்
மணிபோன்ற பாதமதைத்
தொழுதுபோற்றி மன்னவனே சதாகாலம் நினைப்பேன்காணே
விளக்கவுரை :
6990. காணவே கருவூரார் சித்தருக்கு
கனகாபிஷேகமது மிகவுஞ்செய்து
தோணவே யவர்தனக்கு
சரணஞ்சொன்னேன் துப்புரவாய் அவர்பாதம் போற்றிபோற்றி
மாணமருங் கல்வியுள்ள
கொங்கணர்க்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
நீணவே வாலையா னந்தருக்கு
நீதியுடன் பாதமது பணிந்தேன்தானே
விளக்கவுரை :