6611. வாழ்க்கையாம் வெகுகால
மிருப்போமென்னும் வண்மையுடன் பலநூலும் வுளவாராய்ந்து
தாட்கமல பதாம்புயத்தை
மனதிலுன்னி தகமையுள்ள காயாதிகற்பங்கொண்டு
வீட்கமுடன் நெடுங்காலஞ்
சமாதிசென்று விருதாவாய் மறுபடியும் வந்துமென்ன
பாழ்க்கமுடன் பவக்கடலை
விட்டகற்றி பாருலகில் சுந்தரம்போ லிருப்பீர்தானே
விளக்கவுரை :
6612. சுந்தரனே காவிகஷாயம்பூண்டு
சுத்தமுடன் இருப்பதுவும் யோகியல்லோ
தந்திரமாய் அஷ்டசித்தி
யாடியென்ன தாரணியில் யோகமது கொண்டுமென்ன
அந்தரமெல்லாம்
புகழஞானங்கொண்டு அவனிதனில் பொய்வேஷங் கொண்டுமென்ன
மந்திரத்தில் மாங்காய்
விழுங்கதையைப்போல மானிலத்தில் வெகுபேர்கள் மயங்குவாரே
விளக்கவுரை :
[ads-post]
6613. மயக்கவே எந்தனது மணியேகேளும்
மாசற்ற நவலோகச் செந்தூரந்தான்
தியக்கமது வாராமல்
லோகந்தன்னை தீர்க்கமுடன் முறைபாடு சொல்வேன்யானும்
நயமுடைய தங்கமது ஒன்றேயாகும்
நலமான காரீயம் ஒன்றேகாலாம்
அயமதுவும் விராகனது
ஒன்றேயாகும் வப்பனே நாகமது ஆறதாமே
விளக்கவுரை :
6614. ஆறான செம்பதுவும்
ஒன்றேயாகும் வப்பனே குடவனது ஒன்றேயாகும்
காரான வெள்ளியது ரண்டேயாகும்
கருவான வெள்வங்கமொன்றேயாகும்
கூறான வெட்டுருக்கு
ஒன்றேயாகும் குறிப்பான நவலோகமொன்றாய்க்கூட்டி
சேறான லோகமெலாம் ஒன்றாய்ச்சேர்த்து
செப்புகிறேன் வரிசைபெற வண்மைகேளே
விளக்கவுரை :
6615. வண்மையாய் இடைகண்டு
இனமுங்கண்டு வகுப்பான சேர்வையது யானுங்கண்டு
தண்மைபெற நாதாக்கள்
தாள்வணங்கி தாமுரைத்த முறைபாடு வழிபாடெல்லாம்
உண்மையுடன் தாமறிந்து
புத்திவானை வுகமையுள்ள லோகமதைக் கண்டாராய்ந்து
திண்ணமுடன் மூசையிட்டுச்
சீலைசெய்து தீர்க்கமுடன் சரவுலையில் வூதிடாயே
விளக்கவுரை :