போகர் சப்தகாண்டம் 6866 - 6870 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6866 - 6870 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6866. இருந்தாரே நெடுங்காலம் காலாங்கிநாதர் எழிலான மலைமீதில் என்னசொல்வேன்
பொருந்தவே காயாதி கற்பங்கொண்டு பொங்கமுடன் வுலகமதின் மகிமையெல்லாம்
திருந்தவே கண்ணினாற் கண்டுமல்லோ தீர்க்கமுடன் தன்மனதில் உள்ளடக்கி
அருந்தவத்தில் உதித்ததொரு ரிஷிகள்தேவர் வனேகரிட மகிமையெல்லாம் பார்த்திட்டாரே

விளக்கவுரை :


6867. பார்த்தாரே காலாங்கி மலையிலப்பா பாங்கான ரிஷியினுட மகிமைசொல்வேன்
தீர்த்தமென்ற கரையிலப்பா ரிஷியாருண்டு திரமான ரிஷியாரும் புலிரூபந்தான்
ஆர்க்கவே திருமுகத்தைக் கண்டாலல்லோ வப்பனே மானிடத்தின் சித்துபோலாம்
மூர்க்கமது வாராது முனிநாதர்க்கு முனையான வேங்கையுட சித்துதானே

விளக்கவுரை :

[ads-post]

6868. சித்தான வேங்கையென்ற மனிதசித்து ஜெகதலத்தில் யாரேனுங் கண்டதில்லை
பத்தியுள்ள என்தேவர் காலாங்கிநாதர் பாங்கான திரேதாயி னுகத்திலப்பா    
வெத்தியுடன் கண்டதொரு மகிமைதன்னை வேதாந்த சித்தெனக்கு வெளியிட்டார்காண்
எத்திசையும் சித்தர்முனி கண்டதில்லை யெழிலான வதிசயத்தின்கூறுதானே

விளக்கவுரை :


6869. கூறான கோடிவகை யதிசயங்கள் கொற்றவனே காலாங்கி மலையிலப்பா
நீறான மலைமுனியாந் தவசியப்பா நெடுங்காலந் தானிருக்குங் கொடியசித்து
வாறான மச்சமென்ற தேகமப்பா வளமான திருமுகந்தான் மனிதரூபம்
சேறாடும் சுனையோரம் மலையோரத்தில் செம்மலுடன் தவமிருப்பார் ரிஷியார்தானே

விளக்கவுரை :


6870. தானான வவர்பெருமை மெத்தவுண்டு தகமையுள்ள சித்தாதி கண்டதில்லை
கோனான என்தேவர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி
தேனான மகிமைகளுங் கோடாகோடி திரேதாயினுகத்திலப்பா கண்டதுண்டு
மானான நெடுங்கால சித்துவென்று மகதேவர் சொல்லெனக்கு தெரியலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar