6496. கொள்ளவே யுப்பதனை சீலைசெய்து
கொப்பெனவே ரவிதனிலே காயவைத்து
மெள்ளவே கோழியென்ற
புடத்தைப்போடு மேன்மையுள்ள வுப்பதுவுங் கட்டிப்போகும்
கள்ளமது வாறாது
வுப்புக்கப்பா காசினியில் கருவாளி யறிவான்பாரு
உள்ளபடி யானுரைத்தேன்
யுந்தமக்கு வுத்தமனே கைபாகஞ் செய்வாய்காணே
விளக்கவுரை :
6497. காணவென்றால் வுப்பதனை
யெடுத்துமைந்தா கலங்காமல் பூநீரை சுத்திசெய்து
தோணவே நாலுக்கோர்
இடைதான்சேர்த்து தோறாமல் தானரைப்பாய் கல்வமிட்டு
வேணபடி வன்னியின்தன்
பட்டைசாற்றால் வேகமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பூணவே பில்லையது
லகுவாய்ச்செய்து புண்ணியனே கோழியென்ற புடத்தைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
6498. புடமான புடமதுவும் ஆறிப்பாரு புகழான வுப்பினிட கட்டியல்லோ
நீடேதான் நிஷ்களங்கமானவுப்பு
நீடாழி யுலகுபதி யார்தான்கண்டார்
கோடான கோடிமனு சித்தருண்டு
கொற்றவர்கள் கக்டுமல்லோ மறைத்தேவைத்தார்
பாடான பாடதுவும்
யார்தான்செய்வார் பாலகனே விதியாளி செய்வான்தானே
விளக்கவுரை :
6499. விதியான கட்டென்ற
உப்பைத்தானும் விமலனே செந்தூரஞ் செப்பக்கேளு
மதிபோன்ற வுப்பதுவுங்
கசிவுநீங்கி மகத்தான தவளம்போல் உருகியல்லோ
துதியான வுருக்கினம்போல்
குடோரியாக துப்புரவாய் இருக்குமந்த வுப்புதன்னை
பதியான வன்னமென்ற பேதிதன்னை
பாலகனே நாலுக்கோர் அளவுசேரே
விளக்கவுரை :
6500. சேர்த்துமே கல்வத்தில்
பழச்சார்விட்டு செம்மையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பார்த்துமே பில்லையது
லகுவாய்ச் செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
ஆர்த்துமே சில்லிட்டுச்
சீலைசெய்து வப்பனே யேழுசீலை வலுவாய்ச்செய்து
பூர்க்கவே செந்தூரம்
லபிப்பதற்கு புகழான வடுப்பில் வைத்து எரித்திடாயே
விளக்கவுரை :