போகர் சப்தகாண்டம் 6356 - 6360 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6356 - 6360 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6356. தந்தாரே எந்தனுக்குத் தரிசனங்கள் தாக்கான எந்தனையும் ஆரென்றேதான்
சிந்தனையாய் மனதுவந்து கேட்கயானும் சிறப்புடைய காலாங்கி சீஷனென்றேன்
அந்தமுடன் சீனபதி விட்டுயானும் வையனே குளிகையது பூண்டுகொண்டு
விந்தைகளை யறியவென்று இடபாகத்தில் விருப்பமுடன் யான்பணிந்து துதித்திட்டேனே

விளக்கவுரை :


6357. துதிக்கையிலே சுந்தரானந்தரேசர் துப்புரவாய் எந்தனுக்குத் துகளகற்றி
மதிப்புடனே எந்தனையு மனதுவந்து மார்க்கமுடன் கண்டதொரு வினயந்தானும்
விதிப்புடைய விட்டகுறை இருந்ததாலும் விருப்பமுடன் உந்தமக்கு உபதேசங்கள்
கதிபெறவே ஞானோபதேசஞ் செய்து கருவான கேசரியுந் தருவேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6358. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே சுந்தரானந்தரேசர் 
சேரேதான் எந்தனுக்குக் குளிகைதந்து தேற்றமுடன் உலகுபதி மகிமையெல்லாம்
நேரேதான் சதாகாலஞ் சீஷனாக நேர்மையுடன் என்மீதில் மனதுவந்து 
கூரேதான் கேசரியின் மார்க்கந்தன்னை குறிப்புடனே எந்தனுக்குக் கூறினாரே

விளக்கவுரை :


6359. கூறவே புலிப்பாணி மைந்தாகேளு குவலயத்தில் எந்தனுக்கு சீஷமார்க்கம்
தேறவே கண்டல்லோ வாராய்ந்தேதான் தேற்றமுடன் இருப்பதற்கு முறையுஞ்சொல்வேன்
மாறவே தொண்டுசெய்யும் சீஷனுக்கு மகத்தான சன்மார்க்க மேதென்றாக்கால்
ஆறவே விசுவாச வருளும்வேண்டும் வப்பனே அறிவு ஜெபம்வேண்டும்பாரே

விளக்கவுரை :


6360. வெண்டுமே ஆசையுடன் இன்பம்வேண்டும் விருப்பமுடன் தவமுடனே பொறுமைவேண்டும்
தாண்டவம்போல் குருமொழியின் வணக்கம் வேண்டும் தாரணியில் ஜீவகாருண்யம் வேண்டும்
ஆண்டகையின் பதாம்புயத்தை நண்ணல் வேண்டும் வப்பனே இரக்கமுடன் ஈகைவேண்டும்
தூண்டியதோர் கருமான மின்னஞ் சொல்வேன் துப்புரவாய்த் துகளகற்றி இருக்கநன்றே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar