போகர் சப்தகாண்டம் 6351 - 6355 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6351 - 6355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6351. ஈடான கற்பமதை உண்டேன்யானும் எழிலான வையகத்து மாண்பரெல்லாம்
தேடாமல் கற்பமதை யுண்டேன்யென்று தேசமதில் சன்னியாசி வேஷங்கொண்டு
கோடான கோடிபொருள் சம்பாதிக்க கூறினார் கற்பமது கொண்டேன்யென்று
தாடாண்மை கொண்டதொரு பொய்ழஞானிக்கு தாரணியில் தனங்கொடுத்து கெட்டார்பாரே

விளக்கவுரை :


6352. பாரேதான் கற்பமதைக் கொண்டபோது பாங்குடனே சீனபதி சென்றேன்யானும்
நேரேதான் குளிகையது பூண்டுகொண்டு நெடிதான கடலோரஞ் சென்றுயானும்
சீரேதான் சுவர்ணகிரி இடபாகத்தில் சிறப்புடனே மலையேறி சென்றேன் யானும்
ஆரோதான் கண்டவர்கள் ஆருமில்லை வப்பனே சுவர்ணகிரி கண்டிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

6353. கண்டேனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
சண்டமாருதம் போல குளிகைகொண்டு சாங்கமுடன் சுவர்ணகிரி இடபாகத்தில்
தண்டகாரணியமதில் அடியேன்தானும் சாங்கமுடன் சமாதிமுகந் தன்னில்நின்றேன்
அண்டர்பிரான் அருளினது கடாட்சத்தாலே வப்பனே கடலோரமமர்ந்தேன்தானே

விளக்கவுரை :


6354. தானான வையகத்து மகிமையெல்லாம் தாக்கான சுவர்ணகிரி கடலோரத்தில்
மானான மகத்துவங்கள் அதிகமென்று மார்க்கமுடன் சுந்தரானந்தரேசர்  
தேனான சாத்திரங்கள் பாடியல்லோ தேற்றமுடன் குகைதனிலே வைத்தாரப்பா
கோனான யென்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குக் கூறினாரே

விளக்கவுரை :


6355. கூறியதோர் நூலதுவும் பொய்யாதென்று கொற்றவனே சமாதியென்ற பீடம்நின்று
மீறியே யஷ்டாங்க யோகஞ்சென்று மிக்கான தவநிலையில் நிற்கும்போது
நீறுடை சுந்தரானந்தரேசர் நிஷ்களங்க சொருபமென்ற சுடரேகொண்டு
மாறுடைய சித்தனைப்போல் வேஷங்கொண்டு மார்க்கமுடன் தரிசனங்கள் தந்திட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar