6346. தானான
புஜண்டமகாரிஷியார்தாமும் தன்மையுடன் தவஞ்செய்யுங்காலந்தன்னில்
கோனான வுமதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிபோலே
தேனான மனோன்மணியாள்
கிருபையாலும் தேற்றமுடன் சாபமதை நீக்கவெண்ணி
பானான குருபரனார்
ரிஷியாசீர்மம் பாங்குடனே யான்வணங்கி நின்றிட்டேனே
விளக்கவுரை :
6347. நின்றேனே புஜண்டமகா
ரிஷியார்பக்கல் நிட்களங்க மானதொரு சமாதிதன்னை
சென்றேனே நெடுங்காலம்
நானிருந்தேன் தேஜொளியின் கிருபையது வண்மையாலே
வென்றதொரு யான்செய்த
பாவந்தன்னை வேட்கையுடன் அணிதவரா வண்ணம்யானும்
குன்றுடனே மலைதேடி
சமாதிபக்கல் கொற்றவனே சாபமதால் சென்றிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6348. இட்டதொரு சாபமதை நீக்கியல்லோ
எழிலாக வெந்தனுக்குக் காட்சிதந்து
சட்டமுடன் ஞானோபதேசங்கொண்டு
சாயுச்சிய பதவிதனைக்காணவென்று
திட்டமுடன் மனோலயத்தால் அருளுந்தந்து
தீர்க்கமுடன் ஆசீர்மஞ்சாபம்நீக்கி
விட்டகுறை இருந்ததொரு
நேர்மையாலே விடுதிக்கிப்போகவென வருள்கொள்வீரே
விளக்கவுரை :
6349. கொள்ளவென்று கலைமானுங்
கூறும்போது கொப்பெனவே காலாங்கி கடாட்சத்தாலே
தெள்ளமுர்தமான பராபரியின்
பாதம் தேற்றமுடன் அடியேனும் முடிவணங்கி
எள்ளளவுந் தீங்குமிக
நேராமற்றான் எழிலான மனோன்மணியைப் போற்றிச்செய்து
உள்ளபடி கலைமானைப் பாதுகாக்க
உவமையுடன் என்மனதில் எண்ணினேனே
விளக்கவுரை :
6350. எண்ணியே கலைமானின் சாபம்தீர்ந்தேன் எழிலான காயாதிதான் கொடுக்க
உண்ணவே நெடுங்காலந்
தானிருந்தேன் உத்தமனே சித்துமுனி ரிஷியார்கூட்டம்
வண்ணமுடன் கலைமானின்
கற்பந்தன்னை வாகுபெற வுண்டவர்கள் ஆருமில்லை
கண்ணபிரான் கொண்டதொரு
கற்பந்தானும் கலைமானின் கற்பத்துக்கீடாகாதே
விளக்கவுரை :