6341. தருகவே வயிற்றிலுள்ள
காயகற்பம் தண்மையுடன் மனதுவந்து அடியேன்தானும்
பெருகவே யான்வாங்கி மண்டலந்தான்
பேரான குளிகைதனில் குன்றியுண்ண
மெருகலுடன் தேகமது
இறுகியல்லோ மேதினியில் நெடுங்கால மிருப்பதற்கு
பொருகவே காயாதி கற்பங்கொண்டு
பேறான வுலகுதனில் வசித்திட்டேனே
விளக்கவுரை :
6342. வசித்ததொரு குளிகையினால் எந்தனுக்கு வாகான மகிமைகளு மனேகமுண்டு
பசியதுவு மில்லையப்பா
பண்புள்ளோனே பாலகனே சித்தர்களுக் கிடைக்குமோசொல்
நிசிதமுள்ள காயாதி
கற்பந்தன்னை நிகழ்ச்சியுடன் முன்னிருந்த நாதர்தாமும்
உசிதமுடன் கண்டவரும்
யாருமில்லை வுத்தமனே நாதாக்கள் சொல்லார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
6343. சொல்லாரே யின்னமொரு
மார்க்கஞ் சொல்வேன் சுவர்ணமென்ற மலையிலப்பா மேற்பாகத்தில்
வெல்லவே குளிகைகொண்டு
வடியேன்தானும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
புல்லவே வனந்தனிலே
கலைமான்தன்னை புகழ்ச்சியுடன் அடியேனுங் கண்டபோது
நல்லதொரு கலைமானும்
என்னைக்கண்டு நலமுடனே ஓடிவந்து பணியலாச்சே
விளக்கவுரை :
6344. பணிந்துமே எந்தனிட
பாதம்போற்றி பட்சமுடன் எந்தனையும் வினவிகேட்க
துணிந்துமே காலாங்கி
நாதர்பாதம் துப்புரவாய் மனதுவந்து அடியேன்தானும்
அணிகடனின் பதாம்புயத்தின்
சீஷனென்றேன் ஆத்தாளின் கடைபாத தூளியென்றேன்
மணிபோன்ற வார்த்தையது
கூறும்போது மகத்தான என்குருவே என்னலாச்சு
விளக்கவுரை :
6345. என்னவே காலாங்கி நாதசீஷா
எழிலாக எந்தனுக்கு வந்தசாபம்
பன்னவே புஜண்டரிஷியார்தாமும்
பாங்கான கானகத்தில் யாகஞ்செய்ய
துன்னவே யடியனால் வந்தநேர்மை
துப்புரவாய் யாதென்று வினவிக்கேட்பீர்
முன்னமே பெரியோர்கள்
செய்தயாகம் மூதுலகில் அடியேனும் அறியேன்தானே
விளக்கவுரை :