போகர் சப்தகாண்டம் 6336 - 6340 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6336 - 6340 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6336. வந்ததொரு கூர்மத்தைக் கண்டேன்யானும் வளம்பெரிய சுவர்ணகிரி மலையிலப்பா
அந்தமுடன் மலையைவிட்டு கீழிறங்கி வப்பனே சுனையருகே சென்றேன்யானும்
சிந்தனையாய் மனதுவந்து படியிறங்கி சிற்பரனைத் தெரிசிக்க தியானங்கொண்டு
சந்தோஷமாகியல்லோ சுனையோரத்தில் சட்டமுடன் இறங்கையிலே கண்டிட்டேனே

விளக்கவுரை :


6337. கண்டவுடன் கூர்மமது எனைப்பணிந்து கைலாசநாதரென்று தாள்பணிந்து
தெண்டமுடன் பதாம்புயத்தை பணிந்துபோற்றி தெளிவாக சுனையேறி மேலேநின்று
அண்டர்பிரான் எந்தனையுங்காணவந்த வன்பான போகரிஷி நாதாகேளும்
துண்டரிக மாகவல்லோ தட்சணாயன் துப்புரவாய் சாபமது தந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

6338. தந்ததொரு சாபத்தால் திரேதாயுகத்தில் சட்டமுடன் பிரளயத்தில் வந்தேனிங்கே
அந்தமுடன் நெடுங்காலம் சுனையில்யானும் வன்புடனே வாசமது செய்திருந்தேன்
சித்ததொரு சுவர்ணகிரி சுனையில்தானும் சிறப்பான சித்துமுனி வந்ததில்லை
வந்தையுடன் எந்தனுக்கு சாபந்தீர்க்க விட்டகுறை இருந்ததினால் வந்தீர்பாரே

விளக்கவுரை :


6339. பாரேதான் காலாங்கி நாதபாதா பட்சமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சாபமதை நிவர்த்திசெய்து தீர்க்கமுடன் எந்தனையு மீட்பீரானால்
நேரேதான் உந்தமக்குக் காயகற்பம் நெடுங்காலந் தானிருக்க யான்கொடுப்பேன்
கூரேதான் வார்த்தையது மொழியுங்கூறி குறிப்புடனே வரலாறு கூறலாச்சே

விளக்கவுரை :


6340. கூறவே கூர்மமது சொல்லும்போது கொற்றவனே சாபமது நிவர்த்திசெய்தேன்
மீறவே கூர்மமதை சாபம்நீக்கி மிக்கான கற்பமதைக் கேட்கும்போது  
மாறவே எந்தனுக்குத் தெரியவோதி மகத்தான கற்பமதைக் கேட்கும்போது
நாறலுடன் கூர்மமது வயிற்றிருக்கும் நலமான குளிகைதனைத் தருகலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar