போகர் சப்தகாண்டம் 6331 - 6335 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6331 - 6335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6331. அறுகுமே பாஷாணகற்பத்தாலே எழிலான கற்பமது கொண்டபேர்க்கு 
குறுகியே தேகமது வயிரம்போலாம் குவலயத்தில் சித்துமுனி தம்மைப்போலே
அறுவதுவும் மிகவாகி புத்தியுண்டாய் அவனியிலே நீயுமொரு சித்தனாவாய்
நறுவலென்ற திரைநரையும் அற்றுப்போகும் நாதாந்த சித்தொளிவு நிதியுமாச்சே

விளக்கவுரை :


6332. சித்தான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தேசமதில் பலபலவாய் நூல்கள்கூறி
முத்தான பாஷாண கற்பஞ்சொல்ல மூதுலகில் மறைத்துவைத்தார் சித்தரெல்லாம்
சத்தசாகரங்கடந்து குளிகைபூண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
புத்தியுடன் காலாங்கி தாள்பணிந்து புகழான கற்பமதைக் கூறிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

6333. கூறினேன் கற்பமதைக் கொண்டபேர்க்கு குவலயத்தில் நெடுங்கால மிருக்கலாகும்
மாறிட்ட மேனியது தங்கம்போலாம் மகத்தான வாசியது மேல்நோக்காது
நின்றிட்ட மேனியது தவளம்போலாம் நிட்களங்க வாசியது மேலோடாது
வீறிட்டு வார்த்தையது மொழிசொன்னாலும் வீணாகித் தேகமது குண்ணாதன்றே

விளக்கவுரை :


6334. அன்றான புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே சொல்லுகிறேன் உந்தமக்கு
குன்றான மலையேறி குகைகடந்து கூறான சுவர்ணகிரி பதியமர்ந்து
வென்றிடவே குளிகையது பூண்டுகொண்டு வீறான சிகரமென்ற பதியைக்கண்டேன்
தென்றிசையில் தட்சணாமூர்த்திநாயன் தோற்றமுடன் கண்டதொரு கூர்மந்தானே

விளக்கவுரை :


6335. தானான கூர்மமது தன்னைக்கண்டென் தாக்கான திரேதாயி னுகத்திலப்பா
மானான பிரளயங்கள் வந்தபோது மகத்தான கூர்மமது மலையிற்சென்று
தேனான மனோன்மணியாள் இருக்கும்பீடம் தெரிசனமே செய்வதற்கு மனதிலுன்னி
பானான பார்லோகப் பிரளயத்தில் பட்சமுடன் கூர்மமது வந்ததாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar