போகர் சப்தகாண்டம் 6326 - 6330 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6326 - 6330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6326. தங்கமாம் புவனகிரி தன்னில்நின்று தாக்கான விஷமீறி வந்ததங்கம்
லிங்கமாம் சமாதியென்ற பீடந்தன்னில் நிஷ்களங்கமாகிவந்த தங்கமாச்சு
புங்கசித்தி எட்டுடனே பிறந்ததங்கம் புகழான நாதாக்கள் வசிக்குந் தங்கம்
பங்கமிலாத் தங்கமது பாரில்மாண்பர் பார்க்காத பிறவியென்ற தங்கமாச்சே

விளக்கவுரை :


6327. ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி சுகுணமாரா
பாச்சலென்ற பாஷாண கற்பஞ்சொல்வேன் பாருலகில் நாதாக்கள் சொன்னதில்லை
நீச்சுடைய சர்ப்பமது தான்பிடித்து நீமகனே பாஷாணங் களஞ்சிரெண்டு
மூச்சுடனே சர்ப்பமது தானிருக்க முனியான பாஷாணந் தன்னைவாங்கே

விளக்கவுரை :

[ads-post]

6328. வாங்கியே அரவத்தின் வாயில்தன்னில் வளமான பாஷாணங் களஞ்சிதன்னை
தூங்கியே திரியாமல் மைந்தாபாரு துப்புரவாய் வாயில் வைத்து தைத்துப்போடு
ஏங்கியே போகாமல் பாண்டந்தன்னில் எழிலாகத் தானடைத்து வாரமிட்டு
ஓங்கியே போகாமல் மேலுமூடி வுத்தமனே பதனமது நாள்தானெட்டே

விளக்கவுரை :


6329. எட்டான நாளதுவுஞ் சென்றபின்பு யெளிதான பாண்டமதை திறந்துமைந்தா
கட்டான அரவத்தின் வாயைத்தானும் கடுகெனவே தானவிழ்த்து பார்க்கும்போது
திட்டமுடன் அரவமது ஜீவன்செத்து தீர்க்கமுடன் உயிரதுவும் சற்றேநிற்கும்
சட்டமுடன் பாஷாணந் தனையெடுத்து சாங்கமுடன் பாம்புக்குப் பாலைவாரே

விளக்கவுரை :


6330. வார்க்கையிலே யரவமது உயிருண்டாகி வளமான அரவமது மளமேசெல்லும்
பார்க்கையிலே பாஷாணம் விஷந்தானேறி பாங்கான காயகற்ப மாச்சுதப்பா
தீர்க்கமுடன் பாஷாணந் தனையெடுத்து திணையளவு வாகவல்லோ மண்டலந்தான்
ஏற்கையிலே மண்டலமும் மூன்றுகொண்டால் யெழிலான காயமது இருகும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar