போகர் சப்தகாண்டம் 6321 - 6325 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6321 - 6325 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6321. உருக்கியே செம்பதுவும் மலையோரத்தில் வுத்தமனே பாய்ந்துமல்லோ லிங்கமாச்சு
மெருகான லிங்கமது செம்புமாகி மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு
திருவான பீடமது சித்தர்கண்டு தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி 
பருவமுடன் அமாவாசை காலந்தன்னில் பட்சமது குருபூசை செய்வார்தானே

விளக்கவுரை :


6322. தானான பூசையது செய்யும்போது தாக்கான சிவலிங்கந் தன்னில்நின்று
தேனான ஜலமதுவும் முத்துபோலே தேற்றமுடன் சிவலிங்கந் தன்னிற்பொங்கி
கோனான விஷமதுவும் பொங்கியல்லோ கொப்பெனவே ஜலமதுவாய் சுத்திநிற்கும்
பானான நிலமதனை எடுத்துசித்தர் பாங்குடனே சீசாவில் அடைப்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6323. பாரேதான் ஜலமதனை எடுத்துமல்லோ பாங்கான செம்பதனை யுருக்கிக்கொண்டு
நேரேதான் ஆயிரமாங் களஞ்சிதானும் நேர்மையுடன் தானுருவங் காலந்தன்னில்
சேரேதான் இருக்குமுகந் தன்னிலப்பா சேர்வைகண்டு விஷநீரை தாக்குவார்பார்
கூரேதான் ஆயிரத்துக்கோர் களஞ்சிகொடுத்து வுருக்கியல்லோ எடுப்பார்காணே

விளக்கவுரை :


6324. காணவே ஆயிரத்து எட்டுமாற்று கனமான தேவேந்திரன் தங்கமாச்சு
பூணவே தங்கமது பிறவித்தங்கம் புகழான சித்துமுனி வழங்குந்தங்கம்
வீணவே பூசைக்கு வுதவுந்தங்கம் வேறுபடாத் தங்கமது சுயம்புத்தங்கம்
நீணவே கைலாசநாதர்தாமும் நீதியுடன் வீற்றிருக்கும் பீடந்தானே

விளக்கவுரை :


6325. பீடமாம் ஆயிரங்கண் இந்திரர்க்கு பெரான வாசனத்தின் தங்கமாகும்
கூடகோபுரந்தனுக்கு சிகரந்தங்கம் குவலயத்தில் மாண்பர்களுங் காணாத்தங்கம்
மாடமாளிகை நெருங்கும் மன்னர்தாமும் மார்க்கமுடன் ஆதீனத் தங்கமாகும்
தேடறியா நாதாக்கள் ரிஷிகள்தேவர் தோற்றமுடன் கண்டதொரு தங்கமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar