போகர் சப்தகாண்டம் 6316 - 6320 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6316 - 6320 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6316. பார்த்தேனே யவரவர்கள் செய்தநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு
நேர்த்தியுள்ள பெருநூலாங் கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி
பூர்த்தியுடன் அவரவர்க்கு யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி
தீர்த்தமுடன் சிவலிங்க பதியில் சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே

விளக்கவுரை :


6317. பூசித்தேன் அதிதமென்ற நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு
வாசித்தேன் சந்தேகந் தெளிவுநீங்கி வாகுடனே கருவிகரணாதியந்தம்  
நேசித்தேன் சீனபதி பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு
ஆசித்தேன் நெடுங்கால மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

6318. பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா
சிறந்ததொரு புவனமென்ற கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான்
நிறைந்ததொரு குகைதனிலே சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி
குறைந்ததொரு கணக்கதுவும் லக்கோயில்லை கோடானகோடி சித்துமுனி கண்டேனே

விளக்கவுரை :


6319. கண்டதொரு சித்துமுனி ரிஷியார்தாமும் கைலாசபுவனகிரி தன்னிற்றானும்
அண்டமுடி போகாமல் யாகஞ்செய்து வப்பனே தானிருக்குங் காலந்தன்னில்
தண்டறிகமான தொருகானகத்தில் தாட்டீகமுள்ளதொரு செந்தேளப்பா
சண்டமாருதம்போலே ரெக்கைகொண்டு சட்டமுடன் இறங்கிநிற்கப் பார்த்திட்டேனே

விளக்கவுரை :


6320. பார்த்தேனே புவனகிரி சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை
தீர்த்தமுடன் சிகரம்விட்டு மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று
வேர்த்துடலும் விஷமதுவும் தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை
ஆர்த்துமே தானோக்கி கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar