போகர் சப்தகாண்டம் 5836 - 5840 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5836 - 5840 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5836. தானான வையகத்து மாந்தர்க்கெல்லாம் தகமையுள்ள வால்மீகர் சரிகைதன்னை
கோனான குருவான வால்மீகர்தானும் குவலயத்தில் பேர்கொண்ட ஞானசித்து
தேனான வைதீக சாத்திரங்கள் தெளிவுடனே கட்டிவைத்த ஞானசித்து 
பானான பராசரிஷிக் கொப்பதான பாங்கான யடியென்று செப்பலாமே

விளக்கவுரை :


5837. செப்பலாம் இன்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு
ஒப்பமுடன் ஊர்வசியாள் வயதேதென்றால் வுத்தமனே நூற்றிரு பத்தேயாகும்
தப்பிதங்கள் நேராமல் தரணிமீதில் சாங்கமுடன் வீற்றிருந்த மாதுசித்து
இப்புவியில் ஊர்வசியாள் சுருக்கரத்னம் எழிலாகப்பாடிவைத்த மாதுதாமே

விளக்கவுரை :

[ads-post]

5838. மாதான ஊர்வசியாள் காயகற்பம் மகத்தான வையகத்தில் உண்டுமல்லோ
தோதான காவியங்கள் என்றுகூறி தோறாமல் பாடிவைத்த மாதுசித்து
நீதான வியாசரிடம் உபதேசங்கள் நீதியுடன் பெற்றதொரு மாதுதானும்
கோதாவரி கரைதனிலே மடிந்தசித்து கொற்றவனே சமாதியது அங்கேவுண்டே

விளக்கவுரை :


5839. உண்டான சமாதியது மண்டபத்தில் ஓகோகோ நாதாக்கள் கண்டறிந்து
திண்பான வேதமாம் ஆயுர்வேதம் தீரமுடன் கண்டறிந்த மாதுசித்து
கண்டல்லோ ரிஷிமுனிவர் சித்துதானுங் காசினியில் பூசைமுதல் நைவேத்தியங்கள்
சண்டமாருதம்போலே தானடித்து தாரணியில் கோடித்து வருகின்றாரே

விளக்கவுரை :


5840. வருகிறார் பூவாடைகாரிசித்தை மார்க்கமா மின்னமொரு மகிமைகேளு
கருமமதை வையகத்தில் தானகற்றி காசினியில் நெடுங்கால மிருந்தசித்து
தருமமது தானறிந்த கமலசித்து தாரணியில் தானறிந்த கொடியசித்து
அருமையுடன் சீனபதி தேசந்தன்னில் வன்பாகச் சென்றதொரு சித்துபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar